குறுந்தொகை: பாடல் 332
குறுந்தொகை 332 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
வந்த வாடைச் சில் பெயற் கடைநாள்,
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து
கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர்
மடப் பிடி தழீஇத் தடக் கை யானை
குன்றகச் சிறுகுடி இழிதரும்
மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே?
வரையாது வந்தொழுகாநின்ற காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.
மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்
பெயல் - பெய்தல்,மழை
நோய் - காம நோய்
தழீஇ - தழுவி
நண்ணிய - பொருந்திய
