குறுந்தொகை: பாடல் 333

குறுந்தொகை 333 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன்

புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை

நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு

குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்

பணிக் குறை வருத்தம் வீட,

துணியின் எவனோ-தோழி!-நம் மறையே?

''அறத்தோடு நிற்பல்'' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது.

உழுந்தினைம் புலவன்

குறும் படை - குறிய படை

பகழி - அம்பு

கொடு வில் - வளைந்த வில்

குறும் பொறை - குறிய பொற்றை மலை

அணவுதல் - நிமிர்ந்து நோக்குதல்

பணிக் குறை - வினைக் குறை

துணியின் - துணிந்து

மறை - களவு மணம்

பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை (246:1,313:1 )