குறுந்தொகை: பாடல் 334

குறுந்தொகை 334 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு

எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப,

பனி புலந்து உறையும் பல் பூங் கானல்

இரு நீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம்

இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று

எவனோ-தோழி!-நாம் இழப்பதுவே?

''வரைவிடை ஆற்றகிற்றியோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.

இளம் பூதனார்

பெருந் தோடு - பெரிய தொகுதி

எறி திரை - அலை

திவலை - நீர்த்துளி

ஈர்ம்புறம் - நெய்ப்புடைய முதுகு

பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை (246:1,313:1 )

நன்றி - http ://tamil concordance.in