குறுந்தொகை: பாடல் 335
குறுந்தொகை 335 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச்
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினை இழிந்து,
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல்
வல் விற் கானவர் தங்கைப்
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே.
இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
நிரை - நிரல் , வரிசை
நேர் இழை - நுட்ப மிக்க வேலைப்பாடு பெற்ற அணிகலன்
இருங்கல் - பெரிய கல்
வியல் அறை - அகன்ற பரப்பு,வெளி
சினை - கொம்பு, மரக்கிளை
வார் கோல் - நீண்ட அம்பு
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை
(குறுந். 392:5)
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை
(சிறுபாண். 190)
கொலை வில் எயினர் தங்கை (ஐங். 363:2)
வல் வில் கானவர் தங்கை (குறுந். 335:6)
வால் நிணப் புகவின் கானவர் தங்கை
(அகம்.132:5)
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர் (அகம்.320:3)
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசை கொளீஇ/
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன்/
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்/
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்(அகம்.320:1-4)
நன்றி - http ://tamil concordance.in
