குறுந்தொகை: பாடல் 336
குறுந்தொகை 336 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர,
ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!-
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக்
கடு மா நெடுந் தேர் நேமி போகிய
இருங் கழி நெய்தல் போல,
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே.
தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லி மறுத்தது.
குன்றியன்
செறுவர் -பகைவர்
தேம் - தேன்
தேம் பாய் துறைவ - இனிய செய் இயல்பு
கடுமா - விரை குதிரை
விளரி - பண்
இசின் - அசைநிலை
பாணர் படுமலை பண்ணிய எழாலின்/
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ(குறுந்.323:2-3)
நன்றி - http ://tamil concordance.in
