குறுந்தொகை: பாடல் 337
குறுந்தொகை 337 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
முலையே முகிழ்முகிழ்த்தனவே, தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே;
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின;
சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு என
யான் தன் அறிவல்; தான் அறியலளே;
யாங்கு ஆகுவள்கொல் தானே-
பெரு முது செல்வர் ஒரு மட மகளே
தோழியை இரந்து பின் நின்ற கிழவன் தனது குறை அறியக் கூறியது.
பொதுக் கயத்துக் கீரந்தை
கிளைஇய -கிளைத்த, முளைத்த
குரலே(குரல்+ஏ) - தலை முடிக் கொத்து,
கிழக்கு - கீழே,தாழ்ந்தன (திசை அன்று)
செறி - செறிதல், இடைவெளி இன்றி நெருங்கி இருத்தல்
பறிமுறை - பறிதல்,முளைத்தல்,தோன்றுதல் (பற்கள் விழுந்து வளர்ந்த முறை)
சுணங்கு - நிற வேறுபாடு
அணங்கு - வருத்து
யாங்கு ஆகுவள் - எத்தன்மையள்
முலை முகம் செய்தன,முள் எயிறு இலங்கின/
தலை முடிசான்ற........
பேதை அல்லை மேதையம் குறுமகள்/
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து (அகம்.7:1-7)
குன்றக் குறவன் காதல் மட மகள்/
மன்ற வேங்கை மலர் சில கொண்டு/
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தித்/
தேம் பலிச் செய்த ஈர் நறுங் கையள்/
மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே (ஐங்.259)
சுணங்கு அணி வன முலை (நற்.9:6,319:9,கலி.60:1,111:16....)
சுணங்கு வளர் இள முலை (ஐங்.149:2)
சுணங்கு எதிர் இள முலை (மதுரை.416)
சுணங்கு சூழ் ஆகம் (அகம்.161:12)
சுணங்கு அணி ஆகம் (நற்.52:4...)
சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை (அகம்.302:13)
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை (அகம்.343:2)
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய/மென் முலை முற்றம் (அகம்.279:4-5)
ததை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் (கலி.57:17)
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும் (அகம்.362:12)
நன்றி - http ://tamil concordance.in
