குறுந்தொகை: பாடல் 338
குறுந்தொகை 338 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ,
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல,
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை,
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம்
வந்தன்று, பெருவிறற் தேரே-பணைத் தோள்
விளங்கு நகர் அடங்கிய கற்பின்
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.
பெருங்குன்றூர் கிழார்
திரிமருப்பு - முறுக்குடைய கொம்பு
இரலை - ஆண்மான்
அண்ணல் - தலைமைத் தன்மை
அரி - மென்மை (ஐமை- மென்மை/அரியே ஐமை)
அசைஇ - தங்கி,இளைப்பாறி
வீ -மலர்
ததைதல் - நெருங்குதல்
வியல் -அகன்ற
அரில் - புதர்,பிணக்கம் உடைய சிறு தூறு
அற்சிரம் - பனிப் பருவம்
பெருவிறல் - பெரு வெற்றி
நலம் கேழ் அரிவை (கெழு-பொருந்திய) - நலம் மிக்க /நலம் நிறைந்த தலைவி
அசாவுதல் - தளர்தல்
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ/
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும்/
புன்கண் மாலை(குறுந்.330:4-6)
பால் வார்பு குழவி உள்ளி, நிரை இறந்து
ஊர்-வயின் பெயரும் புன்கண் மாலை(344:5-6)
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய/
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை (குறுந்.398:4-5)
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,/
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்/
மாலை என்மனார், மயங்கியோரே;/
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்/
பெரும் புலர் விடியலும் மாலை;/
பகலும் மாலை - துணை இலோர்க்கே.(குறுந்.234)
-மிளைப்பெருங் கந்தன்
மாலை வந்தன்று என் மாண் நலம் குறித்தே(குறுந்.188:4)
குறுந். 330:4-6
344:5-6
398:4-5
நன்றி - http ://tamil concordance.in
