குறுந்தொகை: பாடல் 340

குறுந்தொகை 340 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

காமம் கடையின் காதலர்ப் படர்ந்து,

நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி,

ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை,

அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல்

கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம்

பெயர்தரப் பெயர்தந்தாங்கு,

வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே.

இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது.

அம்மூவன்

கடைதல் - மிகுதல்

அவர்ப் புலம்பி - அவர் திறத்து வருந்தி

ஒரு பாற் படுதல் - ஒரு வழி நிற்றல்

ஆயிடை - அவ்விடை (இரண்டுக்கும் இடையில்)

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅர்எனச் சேறிஎன் நெஞ்சு.(குறள்.1292)

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செலல்.(குறள்.1293)

அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே/

நீஎமக்கு ஆகா தது (குறள்.1291)

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு.(குறள்.1284)

நன்றி - http ://tamil concordance.in