குறுந்தொகை: பாடல் 341

குறுந்தொகை 341 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

பல் வீ படரிய பசு நனைக் குரவம்

பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச்

சினை இனிது ஆகிய காலையும், காதலர்

பேணார் ஆயினும், ''பெரியோர் நெஞ்சத்துக்

கண்ணிய ஆண்மை கடவது அன்று'' என,

வலியா நெஞ்சம் வலிப்ப,

வாழ்வேன்-தோழி!-என் வன்கணானே.

''பருவ வரவின்கண் வேறுபடும்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

மிளைகிழான் நல் வேட்டன்

வீ - மலர்ந்து விரிந்த பூ

படரிய - படர்ந்து, தோன்றி

நனை - அரும்பு

குரவம் - மரம்

பொரி - நெற் பொரி போன்ற புன்கு மலரின் வடிவம்

கொளாஅ - கொண்டு

பேணுதல் - சொற் பிழையாது தவறாது நிற்றல்

கண்ணிய - கருதப் பட்டவை

ஆண்மை - வழுவாது ஆளும் தன்மை

கடவது - செய்து முடிப்பது

அவரோ வாரார் தான் வந்தன்றே/

நறும் பூங் குரவம் பயந்த/

செய்யாப் பாவை கொய்யும் பொழுதே (ஐங்.344)

அவரோ வாரார் தான் வந்தன்றே/

எழில் தகை இள முலை பொலியப்/

பொரிப் பூம் புன்கின் முறி திமிர் பொழுதே (ஐங்.347)

இளவேனிற் பத்து (ஐங்.341-350)

---------------------------------------

நுணவம் (342),கோங்கம் (343),குரவம்(344),அதிரல் (345),பாதிரி (346),புன்கு (347),வலம்சுரி மராஅம்(348),மாம்பூ(349),வேம்பின் ஒண் பூ (350)

பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி (நற்.9:5)

பொரி உரு உறழப் புன்கு பூ உதிர (கலி.33:11)

நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல் (குறுந்.53:2)

.........பொரி எனப்/

புன்கு அவிழ் அகன் துறை பொலிய (அகம்.116:5-6)

பல் வீ வேங்கை வீ உகும் ஓங்கு மலை (நற்.13:7)

கருங் கால் வேங்கை வீ உகு துறுகல் (குறுந்.47:1)

நன்றி - குரா மரம் & புங்கமரம் : https://ta.wikipedia.org/

& - http ://tamil concordance.in