குறுந்தொகை: பாடல் 342
குறுந்தொகை 342 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம்
காவல் மறந்த கானவன், ஞாங்கர்,
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும்
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக்
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த,
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே?
செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.
காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார்
கலை - ஆண் குரங்கு
கை தொட்ட - கையால் தோண்டப்பட்ட
புன் கண் - வருத்தம்
பயம் - என்பயன்
கலை தொடு பெரும் பழம் (மதுரைக்காஞ்சி 292)
