குறுந்தொகை: பாடல் 343
குறுந்தொகை 343 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென-
மிகு வலி இரும் புலிப் பகுவாய் ஏற்றை-
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர் வரை நாடனொடு பெயருமாறே.
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது.
ஈழத்துப் பூதன் தேவன்
கவுள் - யானையின் கன்னம்
அண்ணல் - தலைமைப் பண்பு
பகு வாய் - பிளந்த வாய்
ஏறு - ஆண் புலி
மறு - கறை
கொளீஇய - கொண்டது
விடர்முகை - மலைப் பிளவு, குகை
பெயருமாறே - பெயரும்+ஆறு(வழி)+ஏ
பெயர்தல்,நகர்தல்,இடப் பெயர்வு
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்/
இரும் புலிக் குருளையின் தோன்றும் (குறுந்.47:1-2)
நன்றி - http ://tamil concordance.in
