குறுந்தொகை: பாடல் 344
குறுந்தொகை 344 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத்
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலைச் செருத்தல்
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து,
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை,
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப்
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது.
குறுங்குடி மருதன்
துவலை - நீர்த்துளி, மழைத் தூவல்
பனிக்கடுந்திங்கள் - குளிர் காலம்
புலம் - நிலம்
தூங்கு - தூங்கும், தொங்கும்
அணல - அலைதாடி
வீங்கு முலை - பால் நிறைந்துள்ள பசுவின் மடி
செருத்தல் - பசு
வார்பு - நிறைந்து
உள்ளி -நினைந்து
நிரை - ஆநிரை
இறந்து - நீங்கி
புன்கண் மாலை - துன்பம் தரும் மாலை
