குறுந்தொகை: பாடல் 345

குறுந்தொகை 345 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர்

வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத்

தங்கினிர்ஆயின், தவறோ-தகைய

தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல-

தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி

இழுமென ஒலிக்கும் ஆங்கண்

பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே?

பகல் வந்து ஒழுகுவானைத் தோழி ''இரா வா'' என்றது.

அண்டர் மகன் குறுவழுதி

இழை - தேருக்குரிய ஒப்பனைப் பொருள்,அணி

இயல் வருதல் - இயங்குதல்

கொடுஞ்சி - தேரின் உறுப்பு

மருள் - உவம உருபு

அசைஇ - இளைப்பாறி

தகைய - மதிப்பு,தகுதி,தகைமை

புலம்பு -தனிமை

தைஇய- பொருந்தி, தழுவி

இழும் - ஒலிக் குறிப்புச் சொல்

பெரு நீர் - பெருங்கடல்