குறுந்தொகை: பாடல் 346

குறுந்தொகை 346 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு,

குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப,

மன்றம் போழும் நாடன்-தோழி!-

சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும்,

தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும்,

காலை வந்து, மாலைப் பொழுதில்

நல் அகம் நயந்து, தான் உயங்கிச்

சொல்லவும் ஆகாது அஃகியோனே.

தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது.

வாயில் இளங்கண்ணன்

நாகுபிடி - ஒரு பொருட் பன்மொழி

நயந்த - விரும்பிய

முளை - மூங்கில் முளை

போழும் - ஊடுறுவும்

தொடலை - மாலை

ஓப்பி - ஓட்டி,துரத்தி, விரட்டி

உயங்கி - வருந்தி

அஃகுதல்(அஃகு- சுருங்கி) - நலிதல்,மெலிதல்,வாடுதல்