குறுந்தொகை: பாடல் 347
குறுந்தொகை 347 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல்
குமரி வாகைக் கோலுடை நறு வீ
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும்
கான நீள் இடை, தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்,
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.
காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன்
மல்குதல் - நிறைதல்
நல்குரவு - நீரின் மை குறித்து நின்றது
நல்கூர் சுரம் - நீரற்ற சுரம்
குமரி வாகை - இளமை உடைய வாகை
தோகை - மயில்
குடுமி - உச்சிக் கொண்டை
ஒன்று மணம் - புணர்தல்,மெய்யுறு புணர்ச்சி
நெஞ்சம் - அண்மை விளி
'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்' எனச்/
செய்வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு/
அம் மா அரிவையும் வருமோ?/
எம்மை உய்த்தியோ? உரைத்திசின்- நெஞ்சே!(குறுந்.63)
உகாய்க்குடி கிழார்
'மறப்பு அரும் காதலி ஒழிய /
இறப்பல்' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே (குறுந்.151:5-6)
மணத்தலும் தணத்தலும் இலமே;/
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே (குறுந்.168:6-7)
இன்னாக் கானமும் இனிய பொன்னொடு/
மணி மிடை அல்குல் மடந்தை/
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே(குறுந்.274:6-8)
நன்றி - http ://tamil concordance.in
