குறுந்தொகை: பாடல் 349

குறுந்தொகை 349 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை

உறை அறு மையின் போகி, சாரல்

குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்

மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்

இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க்

குவளை உண்கண் கலுழப்

பசலை ஆகா ஊங்கலங்கடையே.

வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ் சொல்லி வற்புறீஇயது.

பேயார்

நறை -மணம்

வயங்கிய -விளங்கிய

நளி -செறிவு

உறை -மழைத்துளி

அறு -அற்று

மை -மேகம்

பாக்கம் -சிற்றூர்

இனிது மன் (மன் இனிது) - மிகவும் இனிது

ஊங்கலங்கடையே - ஊங்கு+அல்+அம்+கடை+ஏ

ஊங்கு - மேலான,விட, சிறந்தது

அல்,அம் - சாரியை

ஏ - அசைநிலை

மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய/பிறங்கு குரல் இறடி (குறுந்.214:1-2)

யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவு *(காடு) (குறுந்.198:1)

முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர் (குறுந்.155:1)

அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை/

மறத்தலின் ஊங்குஇல்லை கேடு (குறள்.32)

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு (குறள். 122)

திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும்/

பொருளும் அதனின்ஊங்கு இல் (குறள். 644)

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது/

உண்ணலின் ஊங்குஇனியது இல் (குறள். 1065)

நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை தீஇனத்தின்/

அல்லல் படுப்பதூஉம் இல் (குறள்.459)

நன்றி - http ://tamil concordance.in