குறுந்தொகை: பாடல் 350

குறுந்தொகை 350 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

அம்ம வாழி-தோழி!-முன் நின்று,

''பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்'' எனச்

சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ-

ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை

நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,

ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்

மலையுடைக் கானம் நீந்தி,

நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே?

பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது.

ஆலந்தூர் கிழார்

கடுங்குரையம் - கடியம்(பனி ஆகிய கடுமையை உடையேம்)

குரை - குறிப்பு வினை முற்று

செல்லாதீம் - செல்லன் மின்

ஆற்று அயல் - வழியின் அருகில்,வழியின் மருங்கில்

இருங் கோடு - மரக் கிளை

அம் சிறை - அழகிய சிறகு

கணந்துள் - ஆள் காட்டிப் பறவை

வம்பலர் - வழிச் செல்வோர்

பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ/

நெடுங் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி/

சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்/

நரம்பொடு கொள்ளும் அத்தத்து (நற்.212:1-4)

குடவாயில் கீரத்தனார்

ஆள்காட்டி

ஆக்காட்டி

அக்காட்டி

அக்காண்டி

திதீத்தான்

சம்பங்கோழி

ஆலாக்குருவி

நன்றி - http ://tamil concordance.in