குறுந்தொகை: பாடல் 351
குறுந்தொகை 351 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, ''நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?''என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது.
அம்மூவன்
வளையோய் - விளி
இசின் - அசைநிலை
கொடுந்தாள் - வளைந்த கால்
அளை - வளை(நண்டின் வீடு)
அலவன் - நண்டு
அழுங்கல் ஊர் - அலர் தூற்றும் ஊர்
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி/
அலவன் சிறுமனை சிதைய, புணரி/
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்(குறுந்.328:1-3)
.................முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்/
இணர் விழ் புன்னை எக்கர் நீழல் (குறுந்.299:2-3)
பெருங் கடல்/உடை திரை ஒலி(குறுந்.303:2-3)
நன்றி - http ://tamil concordance.in
