குறுந்தொகை: பாடல் 352

குறுந்தொகை 352 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன

கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை

அகல்இலைப் பலவின் சாரல் முன்னி,

பகல் உறை முது மரம் புலம்பப் போகும்

சிறு புன் மாலை உண்மை

அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே.

பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது.

கடியலூர் உருத்திரங் கண்ணனார்

நெடு நீர் - ஆழம் நிறை நீர்

அடை - இலை

புறம் - இலையின் பின் பகுதி

கொடு மென் சிறை - வளைந்த சிறகு

பறவை - வௌவால்

சாரல் - மலைப் பக்கம்

முன்னி - நினைத்து

சிறுபுன்மாலை (சிறிய+புன்மை+மாலை) - துன்பம் நிறை மாலை

தாஅவல் அஞ்சிறை நொப்பறை வாவல்

பழு மரம் படரும் பையுள் மாலை(குறுந்.172:1-2)

முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் (அகம். 260:12)

உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்/

ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுது..(நற்.87:1-2)

..................சிறியிலைக்

குறுஞ் சினை வேம்பின்/ நறும் பழம் உணீஇய

வாவல் உகக்கும் மாலை..

(ஐங்.339:1-3)

செல்லிய முயலிப் பாஅய சிறகர்,/

வாவல் உகக்கும் மாலை..(ஐங்.378:1-2)

பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன

சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை

பகல் உறை முது மரம் புலம்பப் போகி (அகம்.244:1-3)

நன்றி - http ://tamil concordance.in