குறுந்தொகை: பாடல் 353

குறுந்தொகை 353 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக,

கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே,

பாடு இன் அருவி ஆடுதல் இனிதே;

நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில்,

பஞ்சி வெண் திரிச் செஞ் சுடர் நல் இல்

பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ,

அன்னை முயங்கத் துயில் இன்னாதே.

பகற்குறி வந்தொழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது காவல் அறிந்து, பின்னும் ''பகற்குறியே நன்று, அவ் இரவுக்குறியின்'', என்று, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து, தலைமகன் சிறைப்புறத்தானாக வரைவு கடாயது.

உறையூர் முதுகூற்றன்.

ஆர்கலி - முழக்கம்

வெற்பன் - குறிஞ்சித் தலைவன்

புணை - தெப்பம்,மிதவை

கோடு - மலைக் குவடு,மலை உச்சி

கவாஅன் - தாழ்வரை,சரிவு

நிரை - நிரல்,வரிசை

இதழ் - கண்ணிமை

எல்லாம் எவனோ? பதடி வைகல்-

பாணர் படு மலை பண்ணிய எழாலின்

வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,

பெய்த புலத்துப் பூத்த முல்லைப்

பசு முகைத் தாது நாறும் நறு நுதல்

அரிவை தோள் - அணைத் துஞ்சிக்

கழிந்த நாள் இவண் வாழும் நாளே (குறுந்.323)

பதடி வைகலார்

நன்றி - http ://tamil concordance.in