குறுந்தொகை: பாடல் 354

குறுந்தொகை 354 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;

ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;

தணந்தனை ஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ-

அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க்

கடும் பாம்பு வழங்கும் தெருவில்

நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே?

பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.

கயத்தூர் கிழான்

ஆர்ந்தோர் - ஆர்தல்,துய்த்தல்,உண்ணுதல்

தணந்தனை - பிரிவாய் எனில்

கொடுமோ - சேர்த்து விடு

அஞர் - வருத்தம், துயரம், அச்சம்

எவ்வம் - துன்பம்

விட்டென விடுக்கும் நாள் வருக அது நீ

நொந்தனை ஆயின் தந்தனை சென்மோ (குறுந்.236:1-2)

தொண்டி அன்ன என் நலம் தந்து

கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே (குறுந்.238:4-5)

வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,

'தேம் பூங்கட்டி' என்றனிர்; இனியே,

பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,

'வெய்ய உவர்க்கும்' என்றனிர்-

ஐய!- அற்றால் அன்பின் பாலே(குறுந்.196)

மிளைக் கந்தன்

நன்றி - http ://tamil concordance.in