குறுந்தொகை: பாடல் 355

குறுந்தொகை 355 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே;

நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே;

எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று;

பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்

யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!-

வேங்கை கமழும் எம் சிறுகுடி

யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே.

இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது.

கபிலர்

பெயல் - முகில்

பட்டன்று - பட்டது,உண்டாயது

துஞ்சும் - தூங்கும்

பானாள்(பால்+நாள்) - நடுயாமம்

ஓகாரம், ஏகாரம் - அசைநிலைகள்