குறுந்தொகை: பாடல் 356

குறுந்தொகை 356 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்

கழலோன் காப்பப் கடுகுபு போகி,

அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த

வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய

யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய

செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த

பாலும் பல என உண்ணாள்,

கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே?

மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது.

கயமன்

ஆன்று - குறைந்து

கடுகுபு - கடுகி,விரைந்து

அறு சுனை - நீர் அற்ற சுனை

மருங்கின் - மருங்கு,பக்கம்

மறுகுபு - மறுகி,கொதித்து

கலுழி - கலங்கல் நீர்

தவ் என - ஒலிக் குறிப்பு

குடிக்கிய - குடிக்க

கொல்,தான்,ஏ - அசை நிலைகள்

ஏந்திய - செய்யிய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சம்

பல - மிகுதி

கோல் - திரட்சி

பிரசம் கலந்த வெண் சுவைத் தீம் பால்

விரி கதிர்ப் பொன் கலத்து ஒரு கை ஏந்திப்

புடைப்பின் சுற்றும் பூம் தலைச் சிறு கோல் (நற்.110:1-3)

அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை

தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு

உவலைக் கூவல் கீழ

மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே (ஐங்.203)

ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்

செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு

பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள் (நற்.184:1-3)

ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய,

மலை முதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,

தண் மழை தலையவாகுக - ஆகுக நம் நீத்துச்

சுடர் வாய் நெடு வேற் காளையொடு

மட மா அரிவை போகிய சுரனே!(குறுந்.378)

-கயமனார்

குறுங் கால் மகன்றில் அன்ன

உடன் புணர் கொள்கைக் காதலோரே(ஐங்.381:4-5)

புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம்

நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே (ஐங்.386:1-2)

யாய் அறிவுறுதல் அஞ்சி

வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே (அகம்.321:16-17)

கயமனார்

------------------------

பொரி :

ஓமைமரம்(79:2),கள்ளி(154:5),மாமரம்(255:2)

புன்க மலருக்கு உவமை:

53:4,341:2

பொருள்

பொரி - நெல் பொரி,மூங்கிலரிசிப் பொரி(தானியங்களின் பொரி),மரங்களின் பொரிந்த அடிப்பகுதி

** கயமன்/கயமனார் குறுந்தொகையில் 4 பாடல்கள்(9,35,376,396) பாடியுள்ளார்.அவற்றுள் 9 ஆவது பாடல் தவிர ஏனைய மூன்றும் உடன் போக்கு பற்றிய துறையில் உள்ளன.

நன்றி - http ://tamil concordance.in & Pongamia pinnata: https://indiabiodiversity.org/