குறுந்தொகை: பாடல் 357

குறுந்தொகை 357 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

முனி படர் உழந்த பாடு இல் உண்கண்

பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள்,

மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு,

நல்ல என்னும் சொல்லை மன்னிய-

ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன்

ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை

மீன் படு சுடர் ஒளி வெரூஉம்

வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.

தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது.

கபிலர்

முனி(முனிதல்) - வெறுத்தல்

படர் - துன்பம், வருத்தம்,நினைத்தல்

பாடு - தூக்கம்,துயில்

பனி - கண்ணீர்

கால் (போழ்ந்து) - கால் கொண்டு ஒழுகுதல்

போழ்ந்து - பிளந்து

பணை எழில் - மூங்கிலை ஒத்த அழகு

ஞெகிழ் - ஞெகிழ்ந்து, நெகிழ்ந்து

மேவர - மேவருதல், விருப்பம் வருதல்

மன்னிய - பொருந்திய

ஏனல் - தினைப்புனம்

சேணோன் -குறிஞ்சி நிலத்தில் வாழ்பவன், உயரமான பரணில் இருந்து தினைப்புனம் காப்பவன்

ஞெகிழி - தீப்பந்தம்,தீக் கொள்ளி

மீன் - விண்மீன்

சுடர் ஒளி - மிக்க ஒளி,மிகுந்த ஒளி

ஏனல் காவல் (நற்.102:9,128:7,389:6)

ஏனல் காவலர் (குறுந்.54:2,நற்.13:3,கலி.52:14)

ஏனலம் காவலர் (அகம்.12:6)

ஏனல் உழவர் (பதி.30:22)

மென் தினை நுவணை (பதி.30:24)

உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே (நற் 31:12)

கபிலர்

வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே (குறுந். 357:8). - நக்கீரர்

தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் /மணவா முன்னும்......(அகம் 290:10 -12)

நக்கீரர்

குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே (குறுந். 25:5)

நல் தோள் மணந்த ஞான்றை ....(குறுந். 36:4)

புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே (குறுந். 50:5)

மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே(குறுந்.68:4)

நன்றி - http ://tamil concordance.in