குறுந்தொகை: பாடல் 358

குறுந்தொகை 358 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே

எறிகண் பேதுறல்; ''ஆய்கோடு இட்டுச்

சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க

வருவேம்'' என்ற பருவம் உதுக்காண்:

தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப்

பல் ஆன் கோவலர் கண்ணிச்

சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே.

தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

கொற்றன்

விம்முதல் - அழுகை

எறிகண் - கண்ணீர்த் துளிகளை எறியும் கண்

பேதுறல் - வருந்துதல்

ஆய்கோடு - ஆராயப்படும் கோடு

கண்ணி - தலையில் சூடும் மாலை

முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்(பதி.21:20)

பெய்த புலத்துப் பூத்த முல்லை(குறுந்.323:4)

எல்லை கழிய முல்லை மலர (குறுந்.387:1)

முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர் (பதி.21:20)

முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்/குறும்பொறை மருங்கின் நறும்பூ அயர (அகம்.14:7-8)

அவரோ வாரார்- முல்லையும் பூத்தன;

பறி உடைக் கையர் மறி இனத்து ஒழிய,

பாலொடு வந்து கூழொடு பெயரும்

ஆடு உடை இடை_மகன் சென்னிச்

சூடிய எல்லாம் சிறு பசு முகையே (குறுந்.221).

உறையூர் முதுகொற்றன்

மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்

கறவை கன்றுவயின் படர, புறவில்

பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்

செவ் வான் செவ்வி கொண்டன்று

உய்யேன் போல்வல்- தோழி! -யானே (குறுந்.108)

வாள்அற்றுப் புற்குஎன்ற கண்ணும் அவர்சென்ற

நாள்ஒற்றித் தேய்ந்த விரல்.(குறள்.1261)

நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி நோய் உழந்து (அகம்.61:4)

சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த/திண்சுவர் நோக்கி....(அகம்.289:9-10)

ஓவு உறழ் நெடுஞ்சுவர் நாள் பல எழுதிச்/செவ் விரல் சிவந்த (பதி.68:17-18)

ஓவு - கோடு வரையப்பட்ட சுவர்

எழுதி - கோடு கீறி

நன்றி - http ://tamil concordance.in