குறுந்தொகை: பாடல் 359
குறுந்தொகை 359 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
கண்டிசின்-பாண!-பண்பு உடைத்து அம்ம:
மாலை விரிந்த பசு வெண் நிலவின்
குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை,
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ,
புதல்வற் தழீஇயினன் விறலவன்;
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது, தானே புக்குக் கூடியது கண்டு தோழி, பாணற்குச் சொல்லியது.
பேயன்.
கண்டிசின் - காண்பாயாக
பண்பு - பேரன்பு
அம்ம - வியப்பு
பள்ளி யானை - படுக்கை கொண்ட யானை
புறம் கவைஇயினள்(புறம்- முதுகு) - தழுவுதல்
மாலை முன்றில் குறுங் காற் கட்டில்(ஐங்.410:1)
இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து (தொல்.கற்பியல்.நூ.10:9)
இன் இழைப் புதல்வரை வாயில் கொண்டு புகினும் (தொல்.கற்பியல்.நூ.31:3)
புதல்வன் கவைஇயினன் தந்தை மென் மொழிப்/
புதல்வன் தாயோ இருவரும் கவையினள்/
இனிது-மன்ற அவர் கிடக்கை/
நனி இரும் பரப்பின் இவ் உலகுடன் உறுமே (ஐங்.409)
நன்றி - http ://tamil concordance.in
