குறுந்தொகை: பாடல் 361

குறுந்தொகை 361 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு

உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை

மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு

காலை வந்த முழுமுதற் காந்தள்

மெல் இலை குழைய முயங்கலும்,

இல் உய்த்து நடுதலும், கடியாதோளே.

வரைவு மலிந்தவழித் தோழி, ''நன்கு ஆற்றினாய்!'' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.

கபிலர்

அம்ம - கேட்பித்தல்

உயர்நிலை உலகம் - வானுலகம்

சிறிதால்(சிறிது+ஆல்) - சிறியது

ஆல் - அசை

அவர் - சுட்டு

உந்தி - வெள்ளம்

அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி

......

மலை கெழு நாடனை வரும் என்றோளே!(குறுந்.201:1,7)

அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்

பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ.. (குறுந்.83:1-2)

வெண் கோட்டு யானை சோணை படியும்

பொன்மலி பாடலி பெறீஇயர் (குறுந்.75:3-4)

கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,

திரை வந்து பெயரும் என்ப - நத் துறந்து

நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்'

நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே (குறுந்.228:3-6)

...................‌தெண் திரைக்

கடல் ஆழ் கலத்தின் தோன்றி,

மாலை மறையும், அவர் மணி நெடும் குன்றே (குறுந்.240:5-7)

மண்ணுறு மணியின் தோன்றும்

தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே (குறுந்.367:6-7)

நன்றி - http ://tamil concordance.in