குறுந்தொகை: பாடல் 362

குறுந்தொகை 362 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!

சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்;

பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,

சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி,

வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய

விண் தோய் மா மலைச் சிலம்பன்

ஒண் தார் அகலமும் உண்ணுமோ, பலியே?

வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது.

வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்

முருகு - கடவுள்

அயர்ந்து (அயர்தல்) - வழிபடுதல்

முதுவாய் - அறிவு பெற்ற

சினவல் - சினத்தல்

ஓம்புமதி - ஓம்புதல்,வராமல் காத்தல்

சில் அவிழ் - சில சோறு

மடை - தெய்வத்திற்கு இடும் சோற்றுப் பலி

எளித்தல், ஏத்தல் வேட்கை உரைத்தல், கூறுதல்(களவு ஒழுக்கம் பற்றி),உசாஅதல்,ஏதீடு,தலைப்பாடு (ஏதுவை இடையிட்டுத் தலைப்பட்டமை கூறல்)

(தொல்.பொருளியல், நூ.12)

நன்றி - http ://tamil concordance.in