குறுந்தொகை: பாடல் 363

குறுந்தொகை 363 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு,

செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும்

மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று,

புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்

இன்னா அருஞ் சுரம் இறத்தல்

இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது.

செல்லூர்க் கொற்றன்

ஏறு - விலங்குகளில் ஆண் பற்றிய பொதுப் பெயர் ;ஆண்பால் பெயர்

செங் கால் - சிவந்த தண்டு

பதவு - அறுகம் புல்

வார் குரல் - நீண்ட கதிர்

கறித்தல் - கடித்துத் தின்னுதல்

மரையா - மான் வகை

உகாஅய் - மரம்

இறத்தல் - கடத்தல்

திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு/

அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ,/

வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல,/

செழும் பயறு கறிக்கும் புன் கண் மாலை (குறுந்.338:1-4)

வரி மரல் கறிக்கும் மடப் பிணை,

திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே (அகம்.133:17-18)

வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே

மெய்மலி உவகை ஆகின்று இவட்கே (நற்.43:6-7)

வரி நிழல்

--------------------

சிறுபாண்.12,மலைபடு.290,நற்.256:10,388:7,குறுந்.232:5,363:4,ஐங்.62:1,381:2,388:2,அகம்.121:9,165:1,287:12

நன்றி - http ://tamil concordance.in