குறுந்தொகை: பாடல் 364

குறுந்தொகை 364 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற நீர்நாய்

வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்

பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி

எற் புறங்கூறும் என்ப; தெற்றென

வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர்

துணங்கை நாளும் வந்தன அவ் வரைக்

கண் பொர, மற்று அதன்கண் அவர்

மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே.

வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது.

ஒளவையார்

அரில் - பிணக்கம்

பவர் - கொடி

வரிப் புறம் - கோடு

வாளை - மீன்

எல் - ஒளி

தெற்றென - உண்மை தெரியும் (தெற்றென- பிழை)

இறை - முன் கை

பணை - மூங்கில்

துணங்கை - கூத்து, விழா

அவ் வரை - அப்பொழுது

இவரும் - செல்லும்

மள்ளர் - மறவர்

முழவு இமிழும் அகல் ஆங்கண்

விழவு நின்ற வியல் மறுகின்

துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி (மதுரைக்.327-329)

மள்ளர் குழீஇய விழவினானும்

மகளிர் தழீஇய துணங்கையானும் (குறுந்.31:1-2)

*இமிழும் - முழங்கும்

*வியல் மறுகு - அகன்ற பெரிய தெரு

விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல (நற்.50:3)

முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் (அகம். 336:16)

நிரை தொடி நல்லவர் துணங்கை (கலி.73:16)

கலி கெழு துணங்கை (பதி.13:5)

பொய்கைப் பள்ளி புலவு நாறு நீர் நாய்

வாளை நாள் இரை பெறூஉம் ஊர (ஐங்.63:1-2)

வாளை நீர் நாய் நாள் இரை பெறூஉ (புறம்.283:2)

வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்

முள் அரைப் பிரம்பின் மூதரில்* செறியும் (அகம்.6:18-19)

*(மூது+ அரில்)அரில்- புதர், சிறு தூறு

துணங்கையர் குரவையர் அணங்கு எழுந்து ஆடி (சிலம்பு.I:5:70)

நன்றி - http ://tamilconcordance.in