குறுந்தொகை: பாடல் 365
குறுந்தொகை 365 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே-
துன் அரு நெடு வரைத் ததும்பி அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின்
பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே.
''யான் வரையும் துணையும் ஆற்றவல்லளோ?'' என வினவிய கிழவற்குத் தோழி சொல்லியது.
மதுரை நல்வெள்ளி
கோடு - சங்கு
ஈர்தல் - அரிதல்
கலிழ்ந்து- அழுது
ஆனா - அமையா
ததும்புதல் - ஒலித்தல்
தண்ணென் (தண் என்) - ஒலிக் குறிப்பு
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றுஅவர்க்
காணாது அமைவுஇல கண்.(குறள்.1178)
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆர்அஞர் உற்றன கண்.(குறள்.1179)
கோடு ஈர் இலங்கு வளை (குறுந்.11:1,31:5,365:1)
கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ் வளை
அரம் - அராவும் கருவி ,போழ்(போழ்தல்) - பிளத்தல்,அறுத்தல் (ஐங்.194:1)
வளைப்பத்து(191 - 200)
கோடு ஈர் எல் வளை (ஐங்.196:1)
எல் வளை ஆய் நுதல் (ஐங்.200:1)
கடல் கோடு செறிந்த வளை வார் முன் கை (ஐங்.191:1)
..................நீ தந்த
அறை புனல் வால் வளை(193:3-4)
*இமிழும் - முழங்கும்
*வியல் மறுகு - அகன்ற பெரிய தெரு
நன்றி - http ://tamil concordance.in
