குறுந்தொகை: பாடல் 366
குறுந்தொகை 366 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?-
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப்
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு,
ஒழுகு கண்ணள் ஆகி,
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே.
காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, “இவ் வேறுபாடு எற்றினான் ஆயது?'' என்று செவிலி வினாவ, தோழி கூறியது.
பேரிசாத்தன்
பால் - ஊழ்
வரைந்து - வரையறை
சால்பு - தகுதி
பைங்கண் - பசுமையான,பசுமை நிறைந்த
மாச் சுனை - பெரிய சுனை
உள் அகைபு - மன வருத்தம்
பழுது - குற்றம்
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்/கண் என மலர்ந்த சுனை (அகம்.38:10-11)
கண் போல் நீலம் சுனை தொறும் மலர (நற்.161:2)
சுனைப் பூங் குவளை தொடலை தந்தும் (346:4)
நன்றி - http ://tamil concordance.in
