குறுந்தொகை: பாடல் 367
குறுந்தொகை 367 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்,
உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே-
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப்
பூசல் ஆயம் புகன்று இழி அருவி
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே.
வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழிஉவகை மீதூராமை உணர்த்தியது;வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூஉம் ஆம்.
மதுரை மருதன் இளநாகன்
யாழ - முன்னிலை அசை
இறைய - வளைந்த
பெறீஇயர் - பெறுவாய்
உவக்காண் - அங்கு பார்
வந்திசினே - வா (இசின் அசைநிலை)
புகன்று - விரும்பி
துறுகல் - உருண்டைக் கல்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப - நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே(குறுந்.228:3-6)
கண்டிசின் வாழி - தோழி! - தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி,
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே(குறுந்.240:5 - 7)
நன்றி - http ://tamil concordance.in
