குறுந்தொகை: பாடல் 368

குறுந்தொகை 368 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

மெல்லியலோயே! மெல்லியலோயே!

நல் நாண் நீத்த பழி தீர் மாமை

வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின்,

சொல்ல கிற்றா மெல்லியலோயே!

சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே,

நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து

இடிகரைப் பெரு மரம் போல,

தீது இல் நிலைமை முயங்குகம் பலவே.

வரைவு மலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது.

நக்கீரர்

மாமை - கரிய நிறம்,அழகு

வன்பு - வலிமை

சிறியர் - அலர் தூற்றுபவர்

பெரியர் - தலைவனுக்குத் தன்னை வரைவு நேர்ந்தோர்(தன் வீட்டார்)

நீத்தம் - வெள்ளம்.