குறுந்தொகை: பாடல் 369
குறுந்தொகை 369 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
அத்த வாகை அமலை வால் நெற்று,
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே.
தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது.
குடவாயிற் கீரத்தனார்
அத்தம் - வழி
அமலை - அமல்,மிகுதி,நெருக்கம் திரள்
அரி - பரல்
சிலம்பு - அணிகலன்
அரிசி - வாகை நெற்றுள் உள்ள விதை
ஆர்ப்ப - ஒலி எழுப்ப,ஆரவாரம்
கோடை - மேல் காற்று
தூக்கும் - அலைக்கும்
கானம் - காடு
........ ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே (குறுந்.7:3-6)
வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ் சுரம்..(குறுந்.39:1-3)
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன் பெரும் குன்றம் ...(அகம்.45:1-3)
வெள்ளிவீதியார்
நன்றி : https://www.kwai.com
நன்றி: iStock: Subas Chandra Mahato
நன்றி - http ://tamil concordance.in
