குறுந்தொகை: பாடல் 370
குறுந்தொகை 370 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின்,
வில்லக விரலின் பொருந்தி; அவன்
நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே.
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
வில்லக விரலினார்
பொய்கை - இயற்கை நீர் நிலை
அணி - அழகு
கொழு முகை - கொழுத்த அரும்பு
மருங்கு - உடல் பொருட்டு நின்ற சொல்
அவன் - தலைவன்
சேரின் - தலைவன் தன் வீட்டுக்குச் சென்றால்
காந்தள் அம் கொழு முகை, காவல் செல்லாது,/
வண்டு வாய் திறக்கும் (குறுந்.365:1-2)
பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை/
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரன் (குறுந்.370:1-2)
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி/
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் (அகம்.183:11-12)
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் (நற்.238:3)
நன்றி - http ://tamil concordance.in
