குறுந்தொகை: பாடல் 371

குறுந்தொகை 371 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,

மை படு சிலம்பின் ஐவனம் வித்தி

அருவியின் விளைக்கும் நாடனொடு,

மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே.

வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

உறையூர் முதுகூத்தன்

மை - முகில்

சிலம்பு - மலைப்பக்கம

ஐவனம் - மலை நெல்

காமமோ (காமம்+ ஓ) - 'ஓ ' வியப்பிடைச்சொல்

(மருவுதல்- ஒன்றாதல்,தழுவுதல்)

மருவேன் - ஒன்றேன்,தழுவேன்

ஐவனம்(6)

மலை. 115

குறுந்.100:1,371:2

ஐங்.267:3

புறம்.159:17,172:6

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்புஇன்றித்

தும்மல்போல் தோன்றி விடும்.(குறள்.1253)

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

மறைஇறந்து மன்று படும்.(குறள்.1254)

சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்

உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!(குறுந்18:4-5)

-கபிலர்

மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும்.(குறள்.1161)

நன்றி - http ://tamil concordance.in