குறுந்தொகை: பாடல் 372

குறுந்தொகை 372 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பனைத் தலைக்-கருக்குடை நெடு மடல் குருத்தொடு மாய,

கடுவளி தொகுத்த நெடு வெண் குப்பைக்

கணம் கொள் சிமைய உணங்கும் கானல்,

ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக்

கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை

புலர் பதம் கொள்ளா அளவை,

அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

விற்றூற்று மூதெயினனார்

மாய(மாய்தல்) - மறைதல்

கடுவளி - விரைவு மிகு காற்று

உணங்கும் - உலரும், காயும்

ஆழி - கடல்

ஆழி தலை - கடல் அலை

அயிர் - கருமணல்

கூழை - கூந்தல்

எக்கர் - இடுமணல்

பதுக்கை - குவியல், மணற்குன்று

புலர் பதம் - உலர்ந்த செவ்வி

எழுந்தன்று - எழுந்தது

குப்பை வெண்மணல்

-------------- -------------------------

ஐங்.181:3

நற்.291:3

அகம்.160:4,181:13,330:12

கூழைக்கு எருமணம் கொணர்க சேறும் (குறுந்.113:5)

நன்றி - http ://tamil concordance.in