குறுந்தொகை: பாடல் 373

குறுந்தொகை 373 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும்,

இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும்,

வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்

கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க்

கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை

புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி

காந்தள்அம் சிறுகுடிக் கமழும்

ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?

அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.

மதுரைக் கொல்லன் புல்லன்

புடைபெயர்தல் - இடம் மாறுதல்

பிறழ்தல் - தண்மை மிக்க நீர் வெம்மை ஆதல் (இயல்பு திரிதல்)

வெவ் வாய்ப் பெண்டிர்- அம்பல் பெண்டிர்

கௌவை - பழிச்சொல்

எவன் - என்ன?

ஊகம் - கருங் குரங்கு

கறை விரல் ஏறு - ஆண் குரங்கு

கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம்/

காவல் மறந்த கானவன்..(குறுந்.342:1-2)

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;/

நீரினும் ஆர் அளவின்றே - சாரல்/

கருங் கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு/

பெருந் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (குறுந்.2)

நன்றி - http ://tamil concordance.in