குறுந்தொகை: பாடல் 374
குறுந்தொகை 374 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்,
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப,
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே-
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ,
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே.
அறத்தொடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது.
உறையூர்ப் பல்காயனார்
எந்தை - என் தந்தை
யாய் - ஆய்,அம்மா, அன்னை
ஒளித்த செய்தி- தலைவியின் களவு மணம் / ஒழுக்கம்
வெற்பன் - மலைநாடன்
நன்று புரி கொள்கை - வரைவு உடன் படுதல்
ஒன்று(வினை.) - ஒன்றானது,ஒன்றாதல்
இறைய - இறகு
தூங்கு - தொங்கு
கணம் - கூட்டம்
குரீஇ - குருவி
மையல் - அறியாமை
இன் இசைப் பறையொடு வென்றி நுவலத்
தூக்கணங்குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி (புறம்.225:10-12)
ஆலத்தூர்க்கிழார்
நன்றி - http ://tamil concordance.in
