குறுந்தொகை: பாடல் 375

குறுந்தொகை 375 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

அம்ம வாழி, தோழி!-இன்று அவர்

வாரார் ஆயினோ நன்றே-சாரல்

சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து

இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை

பானாள் யாமத்தும் கறங்கும்

யாமம் காவலர் அவியாமாறே.

இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது.

வாழி - அசை நிலை

தொண்டகம் - குறிஞ்சிப்பறை

பானாள் - நடு இரவு

கறங்கும் - ஒலிக்கும்

அவியாமாறு - 'மாறு' இடைச்சொல்/காவல் மிகுதி/உறங்காமை

ஏ - அசை நிலை