குறுந்தொகை: பாடல் 376

குறுந்தொகை 376 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,

வேனிலானே தண்ணியள்; பனியே,

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,

அலங்கு வெயில் பொதிந்த தாமரை

உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.

பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.

படுமரத்து மோசிக்கொற்றன்

துன்னுதல் - அணுகுதல்

பொதியில் - பொதிய மலையில்

சூர் - தெய்வம்

அடுக்கம் - பக்க மலை

ஆரம் -சந்தனம்

தொகுப்ப - ஒருவழிச் சேர்த்தல்

ஐ - மெல்ல மெல்ல, பையப் பைய

வெயில் - வெம்மை

உள்ளத்து(உள்+அகம்+அத்து) - உள்ளே,உள்ளுக்குள்

ஆரம் நாறும் மார்பினன் (குறுந்.161:6,198:7)

ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் (குறுந்.286:3)

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப (குறுந்.376:2)

நன்றி - http ://tamil concordance.in