குறுந்தொகை: பாடல் 377
குறுந்தொகை 377 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்,
மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே-
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே.
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது.
மோசி கொற்றன்
மலர் - தாமரை மலர்
உண்கண் - மைதீட்டிய கண்
ஞெகிழ்ந்த - நெகிழ்ந்த
ஏர் மென் தோள் - அழகு
அடிக்கு
எண் இடுக கடைசியில்
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,/
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி/
அருவியின் விளைக்கும் நாடனொடு,/
மருவேன் - தோழி - அது காமமோ பெரிதே (குறுந்.371)
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.(குறுந்.61:5-6)
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே. (குறுந்.68:3-4)
மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே-
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை,
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
கல் கெழு கானவர் நல்குறு மகளே.(குறுந்.71)
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதல் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;(குறுந்.70:1-2)
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
கருங் கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (குறுந்.2)
நன்றி - http ://tamil concordance.in
