குறுந்தொகை: பாடல் 378
குறுந்தொகை 378 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய,
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச்
சுடர் வாய் நெடு வேற் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே!
மகட் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது.
கயமனார்
படீஇய - படிந்து,கழிந்து
மலைமுதல் - மலையில்
தாஅய் - பரவி,நிறைந்து
தலைய - பெய்ய,பொழிய
சுடர்வாய் - ஒளி விடுகின்ற
அரிவை - இளம்பெண்
சுரன் - சுரம்(போலி)
பெரும் பெயல் தலைய (குறுந்.165:4)
தண் மழை தலைய ஆகுக (குறுந்.378:3)
செம்மறுத் தலைய (நற்.2:4)
கரும் பிடர்த் தலைய பெருஞ் செவிக் குறுமுயல் (புறம்.379:13)
விண்தோய் தலைய குன்றம் (புறம்.379:13)
குறுந்தொகையில் கயமனார் பாடல்கள்:
9,356,378,396(4)
நன்றி - http ://tamil concordance.in
