குறுந்தொகை: பாடல் 379

குறுந்தொகை 379 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப்

பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு,

கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன்,

''அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி!

எம்மில் வருகுவை நீ'' எனப்

பொம்மல் ஓதி நீவியோனே?

நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது.

அகழ்ந்த - தோண்டிய

அறிவு காழ்க்கொள்ளும் அளவை - காமம் சால்பு உடைத்தாகும் பருவம்/ஏற்ற பருவம்

எம்மில்(எம்+இல்) - தலைவன் வீடு

பொம்மல் - தலைவி கூந்தல்