குறுந்தொகை: பாடல் 380

குறுந்தொகை 380 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர்

வென்று எறி முரசின் நன் பல முழங்கி,

பெயல் ஆனாதே, வானம்; காதலர்

நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே;

யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய

வண்ணத் துய்மலர் உதிர

முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே!

பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும், ''கதுமென ஆற்றுவிப்பது அரிது'' என்னும் கருத்தினளாய்,கூதிர்ப்பருவத்து, தலைமகள் கேட்பத் தனது ஆற்றாமை விளங்கத் தோழி சொல்லியது.

கருவூர்க் கதப்பிள்ளை.

விசும்பு கண் - விசும்பில்

புதைய - மறைய

பாஅய் - பரவி

உன்னலர் (உன்னுதல்- நினைத்தல்) - நினைக்காதவர், நினைக்கவில்லை வண்ணத்துய்மலர் - மலரில் உள்ள பஞ்சு நுனி போன்ற உறுப்பு

பனிக் கடு நாள் - கார்த்திகை,மார்கழி

நன்றி - http ://tamil concordance.in