குறுந்தொகை: பாடல் 381
குறுந்தொகை 381 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது,
பசலை ஆகி, விளிவதுகொல்லோ-
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல்,
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி,
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனை இயற்பழித்தது
சாஅய் - மெலிந்து
அல்கல் - இரவு
நரலும் - ஒலி எழுப்பும்,கத்தும்
பொதும்பர் - மரங்கள் நிறைந்த சோலை
மயக்கி - கலக்கி
விலங்கு திரை - குறுக்கிடும் அலைகள்
நக்கது - சிரித்தது
(நகுதல்,சிரித்தல்,மகிழ்தல்)
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ - ஐய! - மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே (குறுந்.169:1-3)
அரிதே தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்
பெரிதே காமம், என் உயிர் தவச் சிறிதே (கலி.137:1-2)
அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே (கலி.137:7)
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.(குறள்.1090)
நன்றி - http ://tamil concordance.in
