குறுந்தொகை: பாடல் 383

குறுந்தொகை 383 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

நீ உடம்படுதலின், யான் தர, வந்து,

குறி நின்றனனே, குன்ற நாடன்;

''இன்றை அளவைச் சென்றைக்க'' என்றி;

கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்

தீ உறு தளிரின் நடுங்கி,

யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.

உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை, நாணுக் கெடச் சொல்லியது.

படுமரத்து மோசி கீரன்

குறி - தோழி குறித்த இடம்

இன்றை அளவை - இன்று ஒரு நாள்

சென்றைக்க - கழியட்டும்

ஓய்வன - செயலறல்

ஒடுங்க - வருந்தி

இலை - இல்லை