குறுந்தொகை: பாடல் 384
குறுந்தொகை 384 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
உழுந்துடைக் கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள்,
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர்
நலன் உண்டு துறத்தி ஆயின்,
மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே.
''நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!'' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது.
ஓரம்போகியார்
கழுந்து - உழுந்து உடைக்கும் தடி (உழுந்து/உளுந்து உடைத்து உடைத்து வழவழப்பான தடி)
கரும்புடைப் பணைத் தோள் - தொய்யில் வரையப்பட்ட தோள்
குறுந்தொடி - சிறிய வளையல்
