குறுந்தொகை: பாடல் 385

குறுந்தொகை 385 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை,

சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ

செரு உறு குதிரையின் பொங்கி, சாரல்

இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும்

பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்

அன்றை அன்ன நட்பினன்;

புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே.

வேற்று வரைவு மாற்றியது.

கபிலர்

பலவு - பலா

சிலைவில் - ஒலிக்கும் வில்

செந் தொடை - செவ்விய அம்பு

வெரீஇ - வெருவி

செரு - போர்க் களம்

பொங்கி - பொங்குதல்,மேல் எழுதல்

வெதிர் -மூங்கில்

அமை - மூங்கில் கோல்

தயங்க - அசைய

அன்றை - தலைவனைக் கண்ட நாள்

புதுவோர்த்து - புதுவோரை உடையது

தீம் பழம் தூங்கும் பலவின்/ ஓங்கு மலை நாடன் (குறுந்.83:4-5)

கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின்/ஆர்கலி வெற்பன் (257:3-4)

.........‌அருவி/தண்ணென் முழவின் இமிழ்இசை காட்டும்/மருங்கில் கொண்ட பலவின் / பெருங்கல் நாட (குறுந்.365:4-6)

பூ நாறு பலவுக்கனி (குறுந்.90:4,373:6)

முன்றில் நீடிய முழவு உறழ் பலவில்/பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து (அகம்.172:11-12)

பலவில்: குறுந்.385:1, அகம்.172:11

பலவின்: குறுந்.18:1, 83:4, 153:2, 257:3, 352:3, 365:5

நன்றி - http ://tamil concordance.in